Top News

ஒரேநாளில் கம்பனிகளைபதிவுசெய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்றுகைச்சாத்து



இலங்கையின் வர்த்தகவரலாற்றில்முதல் தடவையாககம்பனிகளை இலத்திரனியல்அடிப்படையில்தன்னியக்கமுறையி;ல்பதிவுசெய்யும் திட்டமொன்றுக்கானஒப்பந்தம்  இன்றுகாலை (30.05.2017) வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில்,அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

கம்பனிபதிவாளர் திணைக்களத்திற்கும்,கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்தஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப்படுத்த 57மில்லியன் ரூபாசெலவிடப்படுகின்றது. இந்தத்தொகையை கம்பனிபதிவாளர் திணைக்களம்,வரியிறுப்பாளர்களிடமிருந்துஅறவிடாமல் கம்பனிபதிவாளர் நிதியத்திடமிருந்துபெற்றுவழங்குகின்றது.

இந்தபுதியதிட்டம் இன்றுதொடக்கம் ஆரம்பிக்கப்படுவதோடு,மார்ச் இறுதியில் நிறைவுபெறுகின்றது. அதன் பின்னர் ஒரேநாளில் புதியகம்பனிகளை இலத்திரனியல் முறையின் கீழ்;ஒன்லைனில் பதிவுசெய்துகொள்ளமுடியும். இதுவரை காலமும் ஒருகம்பனியை பதிவு செய்வதற்கு இருந்த பல்வேறு சிரமங்கள் இந்த புதியமுறை மூலம் நீக்கப்படுவதோடுமாத்திரமின்றி மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை.

வெளிநாடுகளில் வாழ்வோர் ஒரு கம்பனியை இலங்கையில் பதிவு செய்ய வேண்டுமாயின், இங்கு வந்து சிரமப்பட வேண்டியிருந்த நிலை இனிமேல் இருக்காது. அவர்கள் தமதுஆவணங்களையும்,கடவுச்சீட்டு மற்றும் விபரங்களையும் ஒன்லைன் மூலம் வழங்கிஅவைசரிபார்க்கப்பட்டபின் தமதுகம்பனியைஒரேநாளில் பதிவு செய்து கொள்ள இந்த புதியத்திட்டம் வழிவகுக்கின்றது.அத்துடன் வெளிநாடுகளில் உள்ளோர். தமதுகிரடிட் காட்டின் மூலம் கட்டணங்களைசெலுத்தமுடியும்.

ஊடகப்பிரிவு

Previous Post Next Post