Top News

கிழக்கு முதலமைச்சர் இனவாதம் மற்றும் பட்டதாரிகள் விடயம் தொடர்பில் பிரதமரை சந்திப்பு


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் ஆகியோருக்கிடையில் இன்று முற்பகல் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள்,காணி ஆணையாளர் உள்ளிட்ட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.
 
இதன் போது கிழக்கின் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
 
அத்துடன் கிழக்கில் 1700 பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்க நிதி ஒதுக்கீடுகளை வழங்கியதைப் போன்று அடுத்த கட்டம் கட்டமான நியமனங்களுக்கும் துரிதமாக நிதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்,
 
அத்துடன் கிழக்கின் ஏனைய துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான ஆவணங்களையும் பிரதமரிடம் கையளித்ததுடன் அது தொடர்பிலும் கவனம் செலுத்தி அவற்றை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்,
 
இதேவேளை நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இவ்வாறான சம்பவங்கள் சிறுபான்மையினர் மத்தியில் பாரிய அச்சத்தை  தோற்றுவித்துள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
 
அத்துடன் தற்போது கிழக்கிலும் இனவாத நோக்குடையவர்கள் புகுந்து குழப்பங்களை விளைவித்து மூன்று இனங்களும் சுமுகமான உறவுடன் வாழ்ந்துவரும் கிழக்கில் பிரச்சினைகளை உருவாக்க முயல்வதாகவும் கிழக்கு முதல்வர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
 
சமூகங்களிடையேயான நல்லுறவை குழப்ப நினைக்கும் வன்முறையைதூண்டுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்துவருவதாகவும் எந்தவொரு இனத்துக்கு அநீதி ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
 
இதன் போது கிழக்கின் மாயக்கல்லி மலை விவகாரம் மற்றும் தோப்பூர் செல்வநகர் பிரச்சினை போன்றவற்றையும் கிழக்கு முதல்வர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்,

அத்துடன் கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை  அபிவிருத்தி,புதிய தொழிற்துறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் பிரதமருடன் கலந்துரையாடினார்.

இ​தேவேளை ​கிழக்கின் தொண்டராசியர்களின் பிரச்சினைகள் தொடர்பில்  கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

,இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு முதல்வர் நசீர் அஹமட் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கல்வியமைச்சி்ன் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சியை உடன் அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொண்டராசிரியர்களின் நியமனம் தொடர்பான தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிந்தார்,

இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்தார்.
 
அத்துடன் கடந்த  2013 ஆம் ஆண்டு வரையான  தொண்டராசிரியர்களை கல்விச் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.
 
தொண்டராசிரியர்களை நியமிக்கு விடயத்தை மாகாண கல்வியமைச்சிடம் கையளிக்க வேண்டும் எனவும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
 
அத்துடன் குறித்த காலப்பகுதிகளில் தற்போதைய கல்வியமைச்சரான எஸ் தண்டாயுதபானி அவர்கள் முன்னாள் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியமையினால்  அவர் உட்பட அவரது நிர்வகாத்தினருக்கும் தொண்டராசியர்களின் நியமனம் தொடர்பில் உண்மையாகவும் இலகுவாகவும் இந்த விடயம் தொடர்பில் செயற்பட முடியும் எனவும் கிழக்கு முதல்வர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினார்.

கிழக்கின் தொண்டராசியர்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தக் காலப்பகுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கடமையாற்றியவர்கள் இன்றும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
Previous Post Next Post