Top News

வட கொரியா அதிபரை சந்திக்க தயார்: டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.



கொரிய தீபகற்பத்தில் எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில் வட கொரியா அதிபரை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் கூறியதாவது, அணு ஆயுத சோதனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவற்கு, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமெரிக்கா வந்தால் உகந்த சூழலில் அவரை சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.

அணுகுண்டு சோதனைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா பகிரங்க மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி கப்பலை கொரிய கடற்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், வட கொரியா கடற்பகுதிக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க போர்க் கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ஜப்பான் தனது ராணுவத்தின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பியுள்ளது.
Previous Post Next Post