நோன்பு காலத்திற்கு யாழ் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பதுக்கியுள்ளதாக தெரிவித்து துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இத்துண்டுப்பிரசுரம் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சங்கம் என பெயரிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் அனைவரது வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அங்குள்ள எமது புலனாய்வு செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துண்டுப்பிரசுரத்தில் இராஜாங்க அமைச்சர் மூலமாக பெறப்பட்ட பேரீச்சம்பழங்கள் தொடர்பாகவும் அதனை பெற்று யாழுக்கு கொண்டு வந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் குழு என்ன செய்தது.இதனை யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளையின் திறமையின்மை தொடர்பாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேரீச்சம்பழ அரசியலும் யாழ் கிளிநொச்சி உலமா கிளை சபையின் கையாலாகாத்தனமும என்ற தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப்பிரசுரத்தினால் அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் யாழில் நடைபெறும் மீலாதுன் நபி நிகழ்வு குறித்தும் யாழ் முஸ்லீம் மக்களுக்கென பெறப்பட்ட பேரிச்சம்பழங்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து களவாடப்பட்டுள்ளதாகவும் அத்துண்டுப்பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த துண்டுப்பிரசுரத்தினை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள சங்கம் குறித்து எதுவித கருத்தும் அப்பகுதி மக்களால்தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தமக்குரிய பேரீச்சம்பழங்கள் ஒழுங்கு மறையாக கிடைக்காவிடின் போராட்டங்களை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.