கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு பெயர்போனது. உண்மையில் இந்த கடற்கரை விளையாட்டு நிகழ்வுக்கு பயன்படும் கடற்கரையாகும்.
அறுகம்பை குடாவை அண்டிய பகுதியில் அலையின் வேகம் குறைவாக உள்ள காரணத்தினால் இந்த பகுதியில் வெளியூர் உள்ளுார், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதும் நீந்துவதும் சறுக்குவதுமாய் இருப்பர்.
இந்த பிரதேசம் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் என்ற காரணத்தினால் அதிகப்படியான உள்ளுர் வெளியுர் முஸ்லிம்கள் இந்த கடற்கரையில் குளிப்பர், இந்தக்கடற்கரையில் நுாற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குளிப்பதை காணலாம்.
முஸ்லிம் என்ற தனித்துவத்தை நாம் மறந்து செயற்படுகிற பொழுது அதிக இன்னல்களுக்கு நாம் ஆளாகிறோம், அண்ணலார் சொன்ன பிரகாரம் வாழாமல் இருப்பதாலேயே நாம் இன்று பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.
அறுகம்பை கடற்கரையில் முஸ்லிம் பெண்கள் ஹபாயா மற்றும் சல்வார், சோட்டி (இரவு நேர உடை) போன்றவற்றுடன் குளிக்கின்றனர், கடற்கரையில் ஒரு பெண் மூடிய ஆடையுடன் குளித்தால் ஒரு முறை நீர் பட்டால் உடை அப்படியே மேனியுடன் ஒட்டிவிடும், இது வீட்டில் குளித்தாலும்தான், பகிரங்கமாக ஒட்டிய ஆடையுடன் குளி்ப்பது எவ்வளவு தவறு, எவ்வளவு விரசம் எத்தனை ஆண்கள் பார்ப்பர்? மேனி பருத்த மேனியாக இருந்தால் சொல்லவே தேவையில்லை, உள்ளாடைகள், மார்பகங்கள், இன்னோரன்ன பகுதிகள் மொடல் அழகிகள் போல காட்சி தரும் இதனை பார்க்கவே அதிக ஆண்கள் இந்த கடற்ரைக்கு செல்கின்றனர்.
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், இது மாபெரும் தவறு, பொத்துவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல், பொத்துவில் முஸ்லிம் துாய இளைஞர்கள் அமைப்பு, முஸ்லிம் சமூக அமைப்புகள் இது குறித்து கவனம் எடுக்கும் அதே வேளை தங்கள் சகோதரிகளை, மனைவிமார்களை அழைத்துவந்து மற்றைய ஆண்களுக்கு விருந்து படைக்கும் இந்த குளியலை முஸ்லிம் ஆண்களும் தவிர்த்து கொள்ளுங்கள்.