ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பயணிகள் தீவிரவாத தாக்குதலுக்கு முகம் கொடுக்கலாம் என அமெரிக்க அரசாங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் அமெரிக்க பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும்,கடந்த காலங்களில் பிரான்ஸ்,சுவீடன்,ரஸ்ய போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலையும் அமெரிக்க அரசாங்க திணைக்களம் நினைவுபடுத்தியுள்ளது.
இதேவேளை ஈராக் மற்றும் சிரியாவில் போராடிய ஐ.எஸ்.அமைப்பின் 1900 தீவிரவாதிகள் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குள் உள்நுழைந்துள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.