ஏறாவூர் அலிகார் மாணவன் வாங்காமத்தில் நீரில் மூழ்கி பலி

NEWS
 
 
அலிகார் தேசியக் கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த செய்னுலாப்தீன் முஸ்தாக் அஹமட் எனும் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து மே தின விடுமுறையை கொண்டாடுவதற்கு அம்பாறை தமன பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்கு உள்ள வாங்காமம் மலையடிக் குளத்திற்குச் சென்று நீராடியுள்ளனர்.

இதன்போதே குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

தமன பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6/grid1/Political
To Top