Headlines
Loading...
அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் கலாசாரப் போட்டி

அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் கலாசாரப் போட்டி




(எம்.ஜே.எம்.சஜீத்) 

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கலாசார போட்டி நிகழச்சிகளை நடாத்திவருகிறது. இதன் ஓர் அங்கமாக அதான், கிறாத், இஸ்லாமிய கீதம், நாட்டார் பாடல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நேற்று (10) அட்டாளைச்சேனை அல்-இக்றஹ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அல்-இபாதா கலாசார மன்றத்தின் கலாசாரப் பிரிவு தலைவரும், அதிபருமான எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-இபாதா கலாசார மன்றத்தின் போசகரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அல்-இக்றஹ் வித்தியாலய அதிபர் ஏ.எல்.யாசீன், மன்றத்தின் உப தலைவர் ஏ.ஜீ.அப்துல் கபூர், மன்றத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம். ஜஃபர் மன்றத்தின் உப செயலாளர் ஆசிரியர் ஜே.பஸ்மீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இக்கலாசார போட்டி நிகழச்சியில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியின் போது நடுவர்களாக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேஹ் ஏ.எச்.எம். அம்ஜத்(நழிமி), ஆசிரியர் அல்ஹாபிழ் என்.எம். அப்துல் அஹத்(மௌலவி) ஆசுகவி அன்புடீன், அதிபர் பீ.முஹாஜிரீன், அதிபர் எம்.எஸ்.எம். பைறூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெறுபவர்களுக்கு அல்-இபாதா கலாசார மன்றத்தினால் பெறுமதியான பரிசில்களும், சான்றுதழ்களும் வழங்கப்படவுள்ளது. இம்மன்றமானது கடந்த ஆறு வருடங்களாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கலாசார நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. குறிப்பாக வருடாவருடம் ரமழான் மாதம் ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது