ஆசிரியர்கள் அல்ல யார் போராட்டம் நடத்தினாலும் ஏறாவூர் ரகுமானியா பாடசாலையின் அதிபரை இடமாற்றுவதை தடுக்க முடியாது என மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம் எஸ் சுபைர் தெரிவித்துள்ளார்,
ரகுமானியா அதிபரின் இடமாற்றம் தொடர்பில் தாம் ஏற்கனவே ஆளுனரிடம் கதைத்துள்ளதாகவும் அவர் அதிபரை இடமாற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம் எஸ் சுபைர் மேலும் கூறினார்.
தாம் மாணவர்களின் கல்வி குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் தற்போது ரகுமானியாவின் பதில் அதிபராக கடமையாற்றும் ஏ பி எம் சக்கூர் அதற்கு தகுதியற்றவராக உள்ளதாகவும் எம் எஸ் சுபைர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ரகுமானியாவின் கல்வி நிலையை உயர்த்தவும் மாணவர்களி்ன் எதிர்காலத்தை கருத்திற் கொண்டும் ரகுமானியாவின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எம் எஸ் சுபைர் கூறினார்.
எனவே கிழக்கு மாகாண ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தமக்கு ரகுமானியா பாடசாலையின் அதிபரை இடம்மாற்றுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் மெலும் கூறினார்.