நேற்று இரவு 7.00 மணிக்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பேஸ்புக் நேரலையில் தொலைபேசி மூலமாக உரையாடினால் அந்த அழைப்பின் ஆடியோ அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தொலைபேசியில் பேசுவாராம் ஆனால் பொலிஸ் தேடுகிறதாம், வெளிநாடு செல்ல தடையாம் ஆனால் பேஸ்புக் நேரலையில் வருவாராம் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது சிறிதுநேரம் சிரிப்பாக வருகிறது.
பேஸ்புக்கினை டிரெக்கிங் செய்வது, தொலைபேசியை டிரெக்கிங் செய்வது பொலிஸாருக்கு மிகவும் இலகுவான செயல் ஆனால் அவை செய்யப்படவில்லை. இதற்கான காரணம் புரியவில்லை.
ஞானசார நேற்று தெரிவித்துள்ள கருத்தும் இனவாத கருத்துக்களே, அவர் மறைந்தும் வெளியிலும் ஓரே விடயத்தைதான் செய்கிறார். ஞானசாரவை கைது செய்ய வேண்டும் என்ற கருத்து முஸ்லிம்களுக்கு இல்லை மாறாக இந்த நாட்டில் சமாதானம் மலர வேண்டும். இதுதான் முஸ்லிம்களின் தேவை.