ஜோர்தான் வான் எல்லையை அத்துமீறி நுழைந்த விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் சிரியா அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான் உளவு விமானம் என கண்டறியப்பட்டுள்ளது.
இது ஜோர்தானின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முட்படுவோருக்கு ஓர் எச்சரிக்கை சமிக்சை என ஜோர்தான் அரசு தெரிவித்துள்ளது. ஜோர்தான் சிரியாவை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டி வருவதாக சிரிய அரசு குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில், பிராந்தியத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது