Headlines
Loading...
சாலிகளும் சேகுகளும் முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடுகள்

சாலிகளும் சேகுகளும் முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடுகள்



இந்தியாவின்  ரோ மற்றும் பேரினவாதிகளின்  ஆக்கிரமிப்புடன் இலங்கை முஸ்லிங்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் திரைமறைவில் அரங்கேற்றப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக முஸ்லிங்களின் பிரதான கட்சியும் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைப்பதற்காக அதன் உருவாக்கம் தொட்டு பல்வேறு சவால்களும் அச்சுறுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன ,

அந்த அச்சுறுத்தல்க ளின் உச்ச பட்ச கொடூரமாகவே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் விபத்தும் இருக்கலாம்  என தற்போது பரவலாக பேசப்படுகின்றது, ஆனால் தற்போது  மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் உண்மையை கண்டறிய அறிக்கை கேட்கும் நாடகத்தை அதில் சந்தேகிக்கப்படுவபவரே கேட்டு நிற்பது உளவு நிறுவனங்களின் மற்றுமொரு நாடகத்தின் அரங்கேற்றமா என சந்தேகம் வலுக்கின்றது,

பஷீரை நான் வௌிப்படையாக இந்தியாவின் ரோவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது பலருக்கு அபாண்டமாக தெரியலாம்,ஆனால் அது தான் உண்மை, ஏனெனில் ஆரம்பகாலத்தில் இலங்கையில் உள்ள பல  ஆயுதக்குழுக்களுக்கு இந்தியாவின் ரோ உளவுப் பிரிவே ஆயுதப் பயிற்சி வழங்கியது என்பது ஊரறிந்த விடயம்,பஷீருக்கு உருக்கொடுத்த ஈரோஸ்  ஆயுதக்குழுவுக்கும் இந்தியாவே ஆயுதப் பயிற்சி வழங்கியது.

அப்போது தொடங்கிய  ரோவுடனான நெருக்கத்துடன் கிழக்கில் முஸ்லிங்களின் அரசியல் தனித்துவத்தை இல்லாதொழிக்க பஷீர் எனும் கைப்பாவையை ரோ பயன்படுத்தத்  தொடங்கியது,
இதனடிப்படையிலேயே  கட்சி முரண்பாட்டு  நாடகம் அரங்கேற்றப்பட்டு முஸ்லிம் காங்கிரஸுக்குள் பஷீரின் பிரசன்னம் நிகழ்கின்றது.இதன் அடிப்படையிலேயே  மறைந்த தலைவருக்கு பஷீரின் குணம் தெரிந்ததாலோ எண்ணமோ அவர் கட்சியில் அடக்கியே வாசிக்கப்பட்டார்.

மறைந்த தலைவர் அஷ்ரபுடன் இறுதியில் ஹெலியில் பயணித்த கதிர்காமத்தம்பியை தலைவர் அஷ்ரபுடன் சேர்த்து விட்டது பஷீர் சேகுதாவூத் என்பது திண்ணம்,எனவே கதிர்காமத்தம்பி தான் தற்கொலைதாரியாக விமானத்தில் பயணித்ததாக சந்தேகமும் உண்டு ,கதிர்காமத்தம்பி மீதான ஊகம் நிரூபணமானால் பஷீர் கதி அதோ கதிதான்.

பஷீர் முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் திட்டம் தீட்டியமையும் கட்சிப் போராளிகள் நேரில் கண்ட உண்மை,அதனால் தான் கடந்த மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து கொண்டு தமது கட்சியின் வேட்பாளர்களையே தோற்கடிக்க பகிரங்கமாக பிரச்சாரம் செய்தமையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறிவார்கள்.அடிக்கடி  இந்தியா செல்லும் பஷீரின் நோக்கமும் மக்களால் புரியப்பட வேண்டியதொன்று.

இந்நிலையில் தான்  உண்மைகள் வௌிவந்து காலங்கள் கடந்த பின்னர் சீடி எனும் கதாயுத்தை ஏந்தி முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முற்பட்டார் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. அதன் பின் தான்  உண்மையான ஆவணங்களை திரிபுபடுத்தி போலியான ஆவணங்களை  உருவாக்கி தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும் புத்தகத்தை தயாரித்து ஹராத்தில் பிறந்த புத்தகமாக  இரவோடு இரவாக பொதியிடப்பட்டு முஸ்லிம் மீடியா போரத்தில் உள்ள விலாசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

போலிகளையும் அசலையும் நன்கறிந்த போராளிகள் பஷீரின் போலிக்குற்றச்சாட்டுக்களுக்கு காறி உழிந்து போவென துரத்திவிட்டனர். இந்நிலையில் தான் இந்த புத்தகம் குறித்து தம்மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களுக்கு கிழக்கு முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து  குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சந்தேகத்தின் பேரில் அழைக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத் மூன்று மணி நேர விசாரணையில் தனக்கும் இந்த புத்தகத்துக்கும் சம்பந்தமில்லை என மன்றாடி தப்பித்துக் கொண்டார்,

இந்த அவமானத்தால்  நொந்து  போன பஷீர் சேகுதாவூத்  தான் உற்பத்தி திறன் அமைச்சராக இருக்கும் போது தமது ஊடக செயலாளராக வைத்திருந்த  துவான் நசீர் தாருஸ்ஸலாம்  மறைக்கப்பட்ட உண்மைகள் புத்தகத்தில் பஷீரால்  தயாரிக்கப்பட்ட போலி ஆவணத்தை வைத்து முறைப்பாடு செய்கின்றார்.

இந்த முறைப்பாட்டை பிரபலப்படுத்த விபச்சார ஊடகமான சக்தி தொலைக்காட்சிக்கு ஒப்பந்தத்தை கொடுக்கின்றார். சக்தி தொலைக்காட்சி உரிமையாளர் ராஜமகேந்திரனுக்கும் பஷீருக்கும் இங்கிலாந்தில் உள்ள  சொத்தின் கூட்டு பங்குகள் குறித்துபிறகு கூறுகின்றேன்.

இதனடிப்படையில் தான் ராஜமகேந்திரனின் ஏவல் நாயான  அசாத் சாலியை கொண்டு  கிழக்கு முதலமைச்சரை ஏசும் பணியையும் தூற்றும் பணியையும் செவ்வனே செய்து தமது கைங்கரியத்தில் வெற்றி பெற்றதாக நினைக்கின்றார்.ஆனால்  இதில் கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட சாலியும் துவான் நசீரும் பஷீரின் போலி ஆவணங்கள் நீதிமன்றத்தால் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சிறை செல்வது உறுதி.

எப்போது நயவஞ்சகனான பஷீர் இதில் தனக்கு சம்பந்தமில்லை எனக் கூறி தப்பி விடுவான் இதுவரை ஒரு இடத்தில் இந்த ஆவணங்களை மையப்படுத்து பஷீர் பேசியிருக்கின்றானா இல்லை,அப்படியானால் ரோவின் பயிற்சியை புரிந்து கொள்ளுங்கள்.

கிழக்கு முதல்வர் இவர்கள் மீது  அவதூறு வழக்கு தொடர வேண்டும்,அப்போது தான் இதன் பின்னால் இயங்கும் ரிஷாத் பஷீர் சாலி வலைப் பின்னலை வௌிக் கொணர முடியும். ரோவின் கைக்கூலியான சேகுவும் மகராஜாவின் ஏவல் நாயான சாலியும் முஸ்லிம் சமூகத்தின் சாபக் கேடுகளே...