சுவிஸ் நாட்டில் குறிப்பிட்ட வகை அரிசி மாவில் விஷத்தன்மை கொண்ட பூஞ்சைகள் கண்டறிப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் பரவலாக புழக்கத்தில் இருக்கும் RUS-C வகை அரிசி மாவில் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சைகளை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து சுவிஸ் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவத்திற்கான மத்திய அலுவலகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் பொதுமக்கள் குறித்த அரிசி மாவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், அது உடல் நலனுக்கு தீங்கானது எனவும் எச்சரித்துள்ளது.
மட்டுமின்றி நாட்டில் உள்ள சந்தைகளில் இருந்து குறித்த அரிசி மாவினை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களில் இருந்து உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவத்திற்கான மத்திய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
பாதிப்புக்குள்ளான குறித்த RUS-C வகை அரிசி மாவினை உட்கொள்வதால் கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் எனவும் எச்சரித்துள்ளனர்.