Top News

இஸ்லாமியர்களுக்கு கனேடிய பிரதமர் ரமழான் வாழ்த்து



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

கனடாவில் வாழும் இஸ்லாமியர்கள் எமது நாட்டை வலுவான, பன்முகமான நாடாக இப்போது இருப்பதைப் போன்றே இருக்க உதவ வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்காக கனடிய பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘கனடா மற்றும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் ரமழான் மாதத்தினை ஆரம்பித்துள்ளீர்கள். ரமழான் என்பது இஸ்லாமிய சமூக மக்களுக்கு வருடத்தின் புனிதமான காலமாகும். இந்த காலம் நபிகள் நாயகம் குர்ரானை வெளிப்படுத்தியதை நினைவூட்டுகிறது. நோன்பு, பிரார்த்தனை என இந்த பயணம் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நமக்கு தரப்பட்டுள்ள பரிசுகளுக்காக நாம் மற்றவர்களை பாராட்ட வேண்டும் என்பதை ரமழான் எமக்கு நினைவூட்டுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 150 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில், பலவிதமான கலாச்சாரங்கள், பண்பாடு, நம்பிக்கையுடன் வாழ சிறந்த இடமாக இருக்கும் கனடாவை கௌரவிக்கும் வகையில் ரமழானை கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post