Top News

இலங்கை வந்துள்ள மியன்மார் அகதிகள் எமது முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த உதாரணம்!

 
 
மியன்மார்(பர்மா) தேசத்தில் பௌத்த  கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தங்களுடைய வாழ்விடங்களை இழந்து உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேரி கடல்மார்க்கமாக தப்பி இலங்கை வந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும்.

கடந்த 2006 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் இன்றுவரை மியன்மார் முஸ்லிம்களை பலிதீர்க்கும் நோக்கோத்தோடு அங்கு நடைபெறும் அசம்பாவிதங்கள் பல்லாயிரக்கணக்கான  முஸ்லிம்களின் உயிரையும் உடமையையும் காவுகொண்டுள்ள நிலையில் அந்த மக்கள் வேறுவழியில்லாமல் அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

பௌத்த தீவிர வாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் நிலையை உலக நாடுகள் மாத்திரமல்லாது ஐ.நாவும் கண்டு கொள்ளாதது வேதனையான விடயமாக இருப்பினும் இந்த முஸ்லிம்கள் நிலை குறித்து இலங்கை முஸ்லிம் சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலுள்ள பௌத்த இனவாதிகளால் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுவரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் இறுதியில் இலங்கை முஸ்லிம் சமூகமும் இவ்வாறானதொரு துரதஷ்டவசமான நிலைக்கு தள்ளப்படலாம்.(அல்லாஹ் மென்மேலும் பாதுகாப்பானாக)

மியன்மாரின் சர்ச்சைக்குறிய தேரரான விராது தேரர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்தமையும் அவர் இலங்கை  பௌத்த இனவாதிகளின் முதன்மையானவரான ஞானசார தேரர் அவர்களுடனான சந்திப்பின் பின்னனியில் இலங்கை முஸ்லிம்களையும் வஞ்சம் தீர்ப்பதற்கான நகர்வுகளாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

என்றாலும் எமது நாட்டைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் ஓரளவேனும் அரசியல் பலத்துடன் இருப்பதன் நிமித்தம் அதன் மூலமாக இனவாத நடவடிக்கைக்கு எதிராக நிரந்தரமான தீர்வை பெருவது தொடர்பில் காலதாமதமின்றி செயல்பட வேண்டியதன் அவசியத்தை வேண்டி நிற்கிறது.

மஹிந்தவின் அரசாங்கத்திற்கு இனவாத சாயம் பூசி முஸ்லிம்களை நல்லாட்சியின் பக்கம் திசைதிருப்பிய முஸ்லிம் தலைமைகள் அனைவரும் இன்று நல்லாட்சியின் பங்காளியாக ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த போதிலும் கூட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதானது ஆரோக்கியமான செயல் அல்ல, எனவே முஸ்லிம் தலைமைகள் கட்சி வேறுபாடுகளை கலைந்து முஸ்லிம்களுடைய பிரச்சினைக்கு தீர்வுகான தாமதம் காட்டுவார்களேயானால் எதிர்காலத்தில் மையவாடிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை உருவாக அது வழிவகுக்கும். எனவே அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் சமூகத்தின் இருப்புக்காகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் மக்களின் பிரச்சினையை அவசரமாக தீர்ப்பதிலும் முஸ்லிம் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று யாருடைய ஆட்சி இனவாதத்தை பூஜை செய்கிறது. இனவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது, என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாக விளங்கியுள்ளது, நல்லாட்சியின் நயவஞ்சகத்தில் மூழ்கிய முஸ்லிம் சமூகம் மூச்சுவிட முடியாமல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது, எனவேதான் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வுக்காகவும் போராடி யுத்த பயங்கர வாதத்தை வெற்றிகொண்ட அரசியல் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை வைக்க வேண்டும், காரணம் அவர் இன்று இனவாதிகளின் பின்னால் தனது அரசாங்கத்திற்குள் இருந்தவர்களை இனம் கண்டுகொண்டது மாத்திமல்லாது மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். தனக்கும் இனவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளார்.

எனவே தனது ஆட்சியை கவிழ்த்து பதவியை கைப்பற்ற நாட்டம் கொண்ட இனவாதிகளின் தலைவர்கள் முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கி உள்ளார்கள் என்பதை உணர்ந்து தற்போது முஸ்லிம்கள் விடயத்தில் ஆதீத கரிசணையுடன் மஹிந்த செயல்படுகிறார். எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் 
அதற்கு அல்லாஹுவின் பேருதவியும் மஹிந்தவின் ஆட்சியுமே உதவியாக இருக்கும், என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, எனவே முஸ்லிம் சமூகம் உணர்ச்சிகளை தூர வீசிவிட்டு நல்லாட்சிக்கு மருந்து கட்ட புறப்பட வேண்டும். மேலும் சமூகம் வஞ்சிக்கப்பட காரணமான நல்லாட்சியை தூக்கிச் சுமக்கும் கழுதைகளை கம்பெடுத்து துரத்தியடிக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.

அஹமட் புர்கான்
Previous Post Next Post