Headlines
Loading...
மீள்குடியேறிய மயிலிட்டிப் பிரதேச கிணறுகளில் வெடிபொருட்கள் மீட்பு

மீள்குடியேறிய மயிலிட்டிப் பிரதேச கிணறுகளில் வெடிபொருட்கள் மீட்பு



பாறுக் ஷிஹான்

வலி வடக்கு    மயிலிட்டியில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.

மயிலிட்டி வடக்குத்துறையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்றுக்  (9) காலை ஒரு தொகுதி வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. 
ஆயிரத்து 500 துப்பாக்கி ரவைகள் 7 வெளிச்சக் குண்டுகள்  10 இனந்தெரியாத குண்டுகள் என்பன இதன்போது மீட்கப்பட்டன. இன்னும் 2 உரப்பைகளில் கட்டப்பட்டவாறு அங்கு வெடிபொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம்    வெடிபொருள்கள் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் உள்ள கிணற்றை நேற்றுத் துப்புரவு செய்த போதே இந்த வெடிபொருள்கள்  மீட்கப்பட்டன.

இது குறித்து   காணி   உரிமையாளரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட போதிலும் வெசாக் தினமாகையால் விசேட  அதிரடிப் படையினா் வரமுடியாத நிலை உள்ளதாகவும்  துப்பரவுப் பணியை இடைநிறுத்துமாறும் வெசாக் தினம் முடிவடைந்ததும் விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் வெடிபொருள்களை அகற்றலாம் என காங்கேசந்தறை  பொலிஸார் கூறியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் தற்போது மிள்குடியேறியுள்ள மக்கள்    கடந்த வாரம் தமது காணிகளுக்குள் இருக்கும் கிணறுகளைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள கிணறுகள்  பலவற்றில்    வெடி பொருள்கள் காணப்பட்டன. 
அதன் பின் அதிரடிப் படையினரின் உதவியுடன்  சில கிணறுகளில்  அவை மீட்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றும் மற்றொரு கிணற்றில் இருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.