Top News

கைத்தொழில் வர்த்தக அமைச்சு அமைச்சர் ரிசாத்திடம் இருந்து கை மாறுமா?



கடந்த சில நாட்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கீழ் உள்ள கைத்தொழில் வர்த்தக அமைச்சு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தபால் தொலைதொடர்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட இருக்கின்றது என்று சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. அதேபோல் அமைச்சரின் அசுர வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிர்கட்சி முகநூலிகள் சிலரும் இப்படி ஒரு வதந்தியை தீயாக பரப்பி வருகின்றனர்.

அவ்வப்போது அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறலாம் என்று செய்திகள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் அமைச்சு பறிக்கப்பட்டு ஒன்றுக்கும் லாயக்கில்லாத அமைச்சு  வழங்கப்பட இருப்பதாக இப்படியான செய்திகள் அடிக்கடி எதிர்க்கட்சியினரால் வதந்திகளாக பரப்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதுபோலவே தற்போது அமைச்சரவை மாற்றம் இடம்பெற இருக்கின்றது என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியதை இட்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் இருந்து கைத்தொழில் வர்த்தக அமைச்சு மீள் எடுக்கப்பட்டு தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு வழங்கப்பட இருப்பதாக இந்த விசமிகள் சப்புக்கொட்டுகின்றனர்.

இது இவர்களின் வெறும் கற்பனையும் பகல் கனவுமே தவிர வேறில்லை. அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒன்றுக்கும் உதவாத அமைச்சொன்றை பெற்றுக்கொண்டு, தான் முன்னெடுத்து வரும் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும் என்பதே இவர்களின் பகல் கனவு.

இவ்வாறான செய்திகளை பரப்புபவர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். கைத்தொழில் வர்த்தக அமைச்சு என்பது காலம் காலமாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் பலம் பொருந்திய திறமையும் ஆளுமையும் மிக்க  அரசியல் தலைவர்களால் பொறுப்பு வகிக்கப்பட்ட ஒரு அமைச்சாகும்.

மேற்படி அமைச்சானது நாட்டின் பொருளாதாரத்தை கட்டிக்காக்கும் முக்கிய முப்பத்திநான்கு அரச நிறுவனங்களை உள்ளடக்கிய அமைச்சுக்களாகும். இந்த அமைச்சை தற்போதுள்ள கெபினட் அமைச்சர்களில் மிகத்திறமையாக கொண்டு நடாத்தக்கூடிய ஒரு அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தான் என்று மற்றைய அரசியல் தலைமைகளால்  முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஏனெனில், தற்போது தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் இவருக்கு இந்த அமைச்சையே ஜனாதிபதியாலும், பிரதமராலும் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதே இதற்கான அத்தாட்சி
தான் இவ்வமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து மிகத்திறமையாகவும் நேர்மையாகவும் அமைச்சர் ரிசாத் தன் கீழுள்ள நிறுவனங்களை நடாத்தி வருகின்றார். நஷ்டத்தில் இயங்கி வந்த பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியிருக்கின்றார். இதற்காக இந்நிறுவனங்களில் உயர் அதிகாரிகளையோ அல்லது நிருவாகிகளையோ நியமிக்கும் போது திறமைக்கும், ஆளுமைக்குமே முன்னுரிமை அளித்திருக்கின்றார். இதில் அரசியல், உறவுமுறை என்றில்லாமல் முடிந்தளவு திறமையின் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களையும் குறிப்பிட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக செயற்படுத்தக் கூடியவர்களையும் துறைசார்ந்த நிபுணர்களையுமே தனது நிர்வாகத்தில் நியமித்துள்ளார். ஊழல் மோசடிகள் இவருடைய நிருவாகத்தின் கீழ் கண்டு பிடிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பின்னிற்க மாட்டார். இதனை இந்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெரும்பான்பை இனத்தைச்சேர்ந்த சிங்கள அதிகாரிகள் சிலாகித்துப் பேசுவார்கள்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் அடிமட்டத்தில் இருந்து உச்சத்தை தொட்டவர் என்ற காரணத்தினால் இவருடைய வளர்ச்சியை சகிக்க முடியாத சிலர் ஊழல் அமைச்சர் என்று அவதூறான செய்திகளை முகநூலில் இவரைப்பற்றி பரப்பிய போதிலும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது நிருவாகத்தின் கீழ் வருகின்ற அமைச்சினதும் நிறுவனங்களினதும் நடவடிக்கைகளில் எந்தவித குளறுபடிகளோ, ஊழலோ, மோசடியோ, சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளோ இல்லாத வகையிலேயே தன் கீழுள்ள நிருவாக கட்டமைப்பை வரையறுத்துக் கொண்டுள்ளார். அதனால்தான் யார் எத்தகைய ஊழல் மோசடிகள் என்று குற்றம் சாட்டிய போதிலும் ஒரு சிறு ஆதாரத்தைக்கூட அவர்களால் இவருடைய நிருவாகத்திற்கு எதிராக காட்ட முடியாமல் இருக்கின்றது.

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது தனது அமைச்சின் கீழுள்ள சகல நிறுவனங்களினதும் நிருவாகிகளையும் அதிகாரிகளையும் தனது அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் ஒன்றுகூட்டி குறிப்பிட்ட ஒவ்வொரு நிறுவனத்தினதும் முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பில் விவாதிக்கின்றார். குறைபாடுகளை கேட்டறிந்து தீர்வுகளையும் வழங்குகின்றார். திறமையற்ற விவேகமில்லாத நிருவாகிகளை இனங்கண்டு  குறிப்பிட்ட பதவியிலிருந்து நீக்கி விடுவார். இப்படி அமைச்சர் தனது பணியை மிக மிக திறமையாக செய்து வருகின்றார். நிருவாகத் திறமையையும், வெற்றிகரமாக நிறுவனங்களை கொண்டு நடாத்தும் ஆற்றலையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு அல்லாஹ் வாரி வழங்கியுள்ளான்.

யார் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி ஓய்வின்றி ஒரு நாளின் முழுப் பொழுதிலும் மக்கள் சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்து சுறுசுறுப்புடன் திறமையாக இயங்கி வரும் இவரைவிட இந்த அமைச்சை இயக்குவதற்கு தகுதியானவர் வேறு யாரும் கிடையாது என்பதே நடுநிலையோடு சிந்திக்கும் நல்ல மனிதர்களின் கணிப்பு.

அதுபோக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரானவர்கள் முதலில் இரண்டு விடயங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.!
1.       அவர் ஒருபோதுமே இந்த அமைச்சை இழக்கமாட்டார்.
2.       ஒருபோதுமே எதிர்க்கட்சியிலும் இணைந்துகொள்ள மாட்டார்.
காரணம் : இவர் ஒரு தீவிர சமூக சேவையாளன். இவருடைய நாடி, நரம்பு இரத்தம், சதை, உயிர், மூச்சு எல்லாமே மக்கள் பணியுடனும், சமூக சேவையுடனும் இரண்டறக் கலந்துள்ளது. தான் சார்ந்த மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும், சமூக அபிவிருத்திக்காகவும் தனது வாழ் நாளையே அர்ப்பணித்துள்ள தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்களின் தீவிர செயற்பாடுகளுக்கு இந்த அமைச்சு மிகவும் தேவையான ஒன்றாகும். ஆகவே அவர் இந்த அமைச்சை எந்த காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

அதேபோல் தன்னை நம்பி தான் பிரதிநிதித்துவப்படும் மக்களின் தேவைகளையும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு குரல் கொடுப்பதனால் மாட்டும் எதையும் சாதிக்க முடியாது என்பதனையும் அனுபவ ரீதியில் அ.இ.ம.கா. தலைவர் உணர்ந்துள்ள படியால் இவருடைய தீவிர செயற்பாட்டிற்கு எதிர்க்கட்சி அரசியல் தொய்வினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் ஆளுங்கட்சியுடன் இருந்தால் மாட்டுமே பெரும்பாலான விடயங்களை சாதிக்கவும் முடியும்.

Thulkar Nayeem
Previous Post Next Post