சற்றுமுன்னர்- கல்முனை சொகுசு பஸ் பொலன்னறுவையில் விபத்து; நால்வர் மரணம்

NEWS


பொலன்னறுவையில் இருந்து ஷியா (Ceylon Muslim)

மைக்ரோ சொகுசு பஸ் சற்று முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்து பொலன்னறுவை பிரதேசத்தில் சற்று மு்னனர் இடம்பெற்றுள்ளது. ஸ்தலத்திலே நால்வர் உயிரழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




பிந்திக்கிடைத்த தகவல்

பொலன்னறுவை - பெந்திவேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே  மோட்டார் சைக்கிளில்   பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றுடன்  மோட்டார் சைக்கில்  ஒன்று மோதியமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நால்வரும் ஒரு  மோட்டார் சைக்கிளில்  பணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பலியானவர்கள் 23 முதல் 47 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12.05 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பஸ் ஒன்றுடன் மோதியதில் 4 பேர் பலி.
6/grid1/Political
To Top