பெற்றோர்களே!!! உங்களது பிள்ளைகளில் கூடிய கவனம் எடுக்கவும்

NEWS


லண்டன் தீம் பார்க்கில் விபத்துக்குள்ளாகி பலியான பள்ளிச்சிறுமி.Tamworth பகுதியில் உள்ள டிராகன் மனார் தீம் பார்க்கிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பள்ளி சுற்றுலாவாக டிராகன் மனார் தீம் பார்க்கிற்கு வந்த 11 வயது சிறுமி ஒருவர் படகு சவாரியின் போது தவறி தண்ணீரில் விழுந்துள்ளார்.பலத்து காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.


இச்சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இச்செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.இதனையடுத்து டிராகன் மனார் தீம பார்க் மூடப்பட்டுள்ளது. தவறி வழுந்த சிறுமி பாறையில் மோதியதால் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதேசமயம் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். சிறுமி லேசெஸ்டரை சேர்ந்த எவா ஜானத் என பொலிசார் வெளியிட்டுள்ளனர்
6/grid1/Political
To Top