Top News

புனித நோன்புடன் மற்றுமொரு வரலாற்று சாதனை படைத்த ஹாசிம் அம்லா



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

அதிவேகம் 2000, 3000, 4000, 5000, 6000: தற்போது 7 ஆயிரம்- ஹசிம் அம்லாவின் சாதனை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஹசிம் அம்லா பெற்றுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி தொடக்க வீரர் ஹசிம் அம்லா. இவர் ஏற்கனவே 2 ஆயிரம், 3 ஆயிரம், நான்காயிரம், ஐந்தாயிரம் மற்றும் 6 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்று இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 23 ரன்களை எடுக்கும்போது ஹசிம் அம்லா அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஹசிம் அம்லா 153 போட்டிகளில் 152 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 161 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சிலும், கங்குலி 174 இன்னிங்சிலும் 7 ஆயிரம் ரன்களை தொட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post