Top News

சிங்கள மயமாகும் அக்கரைப்பற்று மாநகரம்; வெசாக்கூடுகள் ஜொலிப்பு




சிலோன் முஸ்லிம் சுழற்சி செய்தியாளர் 

அக்கரைப்பற்று மாநகரமெங்கும் வெசாக்கூடுகள் கட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது, அக்கரைப்பற்று விகாரையை அண்மித்துள்ள பிரதேசமெங்கும் வெசாக்கூடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பதாக வெசாக் தோரணம் ஒன்றும், வீதியின் இருமருங்கிலும் சொக்கூடுகள் தொங்கவிடப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

அக்கரைப்பற்று நகரின் மணிக்கூட்டு கோபுர வடிவமைப்பும் விகாரை போன்றதே, வெளியூரில் இருந்து அக்கரைப்பற்றிற்கு வருகிறபொழுது அக்கரைப்பற்று சுற்றுவட்டத்தை நெருங்கினால் சிங்கள கிரமம் போன்றுதான் தோன்றும்.

பாரிய பரப்பளவில் அமையப்பெற்றுள்ள விகாரை, இதனை சுற்றியுள்ள சிங்கள குடும்பங்கள், சிங்கள பாடசாலை என்று பார்க்ககையில் சிங்கள மயமாகினாலும் ஆச்சர்யம் இல்லை. முன்னொரு காலத்தில் அக்கரைப்பற்று நகரம் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்ததாம்.

Previous Post Next Post