அக்கரைப்பற்றில் கடற்கரையில் ஒருபக்கம் இசைக்கச்சேரி மறுபக்கம் மார்க்க சொற்பொழிவு

NEWS


அக்கரைப்பற்றிலிருந்து இர்ஷாத் - ( 2017-05-12 இரவு 7.30 மணி)

அக்கரைப்பற்று கடற்கரையில் முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவரின் பாராட்டு விழா ஒன்று இடம்பெற்று கொண்டிருக்கிறது, இந்த நிகழ்வில் சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டு இசையும் இடம்பெறுகிறது, இந்த மேடையில் முஸ்லிம் பெண்கள் இருவர் முக்காடிட்டு இருப்பதையும் காண முடிந்தது. இதில் என்ன விடயம் என்றால் அதே கடற்கரையில் ராபிதா இஸ்லாமிய அமைப்பின் பாரிய மார்க்க பிரச்சார கூட்டம் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

புனித றமழானை வரவேற்க இந்த சொற்பொழிவு இடம்பெறுகிறது, பிரபலமான உலமாக்கள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர், குறிப்பிட்ட இந்த நிகழ்வை காண மக்கள் திரண்டுள்ள நிலையிலும் மற்றைய இசையோடு நடக்கும் நிகழ்விலும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் அரசியல் பிரமுகர் இவ்வாறான பாராட்டு நிகழ்வை நடாத்த வேண்டும் என்றால் வேறு ஒரு தினத்தில் இசைப்பாடல்கள் - சினிமாப்பாடல்கள் தவிர்த்து நடாத்தியிருக்கலாம். ஆனாலும் இது நடைபெறவில்லை இது ஒட்டுமொத்த மார்க்க சொற்பொழிவை சீரழிக்கும் செயற்பாடாகும்.


6/grid1/Political
To Top