மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பலஸ்தீன் ஜனாதிபதி மொஹமட் அப்பாஸுக்கு சவுதியின் சல்மான் பின் அப்துல்லாஹ் மன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தான் ஜனாதிபதியான பின்னர் முதலாவது விஜயத்தை சவுதிக்கே மேற்கொள்ளவுள்ளார். முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கும் டிரம்புக்கும் இடையிலான விசேட மாநாடு சவுதியின் ரியாத் நகரிலேயே நடைபெறவுள்ளது. இதனை சவுதி அரசாங்கமே ஏற்பாடு செய்கின்றது.
டிரம்புடன் இஸ்ரவேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை சந்தித்து இஸ்ரவேல்-பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் தீர்வு காண தான் எதிர்பார்த்துள்ளதாகவும் பலஸ்தீன் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்