அஸ்ஸலாமு அலைக்கும், (வ.வ)
இஸ்லாம் என்கின்ற புனித மார்க்கத்தை பின்பற்றும் நாம் அதனை பரிபூரணமாக விளங்கி நடத்தல் வேண்டும், நம்மில் ஒரு துளியளவேனும் இஸ்லாமியத் விலகிவிடக்கூடாது. நபியவர்கள் சொல்லிக்காட்டியதும் அல்குர்ஆனின் வசனங்களும் எங்கள் உள்ளங்களுக்குள் பொதி்ந்து கிடக்க வேண்டும்.
ஐவேளை தொழுகை எமக்கு கட்டாயமான ஒன்று, அதனை தவறாமல் பின்பற்றல் வேண்டும், அதே போலத்தான் ஜூம்ஆ தொழுகையும். இன்று ஜூம் ஆ தொழுகை என்பது ஒரு பொருட்டாக இருப்பதில்லை, ஐவேளை தொழாதவர்கள் ஜூம்ஆவுக்கு சென்றால் போதும் என்று எண்ணும் அளவுக்கெல்லாம் இருக்கிறது.
ஜூம்ஆ தினத்தில் ஜூம்ஆவுக்கு குறித்த நேரத்தி்ல் செல்ல வேண்டும், ஆனால் இன்று நடப்பதோ தொழுகைக்கு தகபீர் கட்ட ஆரம்பிக்கும் போதுதான் பள்ளிக்குள் செல்வார்கள் அதுவரை வெளியில் நண்பர்களுடன் உலகவிடயங்கள் குறித்து பேசுவர் அல்லது மொபைல் போனில் கதைப்பர் சிலர் சாட்டிங் செய்வர். இப்படி ஜூம்ஆ பிரசங்கத்தை பலர் பொடுபோக்காக விட்டுவிட்டனர். இவைதான் எமது சமூகத்தின் சாபக்கேடு. இன்று இஸ்லாம் ஒரு கேளிக்கை விநோதப்பொருளாக மாறிவிட்டது.
அல்லாஹ் எமது சமூகத்தை பாதுகாப்பானாக