Top News

அனர்த்­தப்­ ப­ணிகளில் கள­மி­றங்­கினார் ரவூப் ஹக்­கீம்



(பிறவ்ஸ்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மல்வானை மக்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஒன்றுகூடல் நேற்­று ஞாயிற்றுக்கிழமை (28) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மல்வானை ரக்‌ஷபான ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

மீட்பு பணிகளில் பயன்படுத்துவதற்கு ஒரே­யொ­ரு வள்ளம் மாத்தி­ரமே இரு­ப்­பதால் மேலும் சில வள்­ளங்­களை வழங்குமாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. தேவைப்­ப­டும் வள்­ள­ங்­களை தான் வழங்­கு­வ­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறு­தி­ய­ளித்­தார். அத்துடன் எதிர்காலத்தில் வெள்ளம் வருவதை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை பியகம பிரதேச செயலகத்தில் நடத்துவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதே­வேளை, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அம்பதலே மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்­சர், மக்­க­ளுக்கு தொடர்ந்தும் சுத்தமான குடி நீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.

இவ்விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன், மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஊர்பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post