Top News

கோத்தபாயவுக்கு எதிராக மஹிந்த அணியினர்



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,
2020இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் மஹிந்த அணியின் சார்பில் யாரைப் போட்டியிட வைப்பது என்று எமது அணி கலந்தாலோசிக்கத் தொடங்கியுள்ளது. பலரும் பல்வேறு யோசனைகளைக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியாவதற்குத் தகுதியுடையவர்கள் எமது அணியில் உள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போது கூறமாட்டேன். அவ்வாறு கூறினால் மஹிந்த அணியில் இருந்து கொண்டு என்னால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். சிலர் என்னைப் பகைத்துக் கொள்வர்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை நான் விரும்பவில்லை. அதை எதிர்க்கின்றேன். கோத்தபாயவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் என்று இரண்டு அணிகள் மஹிந்த தரப்பில் உள்ளன.
எல்லாவற்றையும்விட இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே எமது தேவையாக உள்ளது. அதற்கான சக்தியை மே தினக் கூட்டம் எங்களுக்குத் தந்துள்ளது. அந்தச் சக்தியை நம்பிக்கையாகக் கொண்டு நம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவுள்ளோம் என்று வாசுதேவ மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post