உலகின் மிகவும் குண்டான ஆணாக கருதப்படும் சுமார் 600 கிலோ (1,300 பவுண்ட்) உடைய ஜூவான் பெட்ரோ பிரான்கோ (Juan Pedro Franco) என்ற மெக்ஸிகோ இளைஞருக்கு உடல் குறைப்பு சிகிச்சைகளை மெக்ஸிகோ மருத்துவமனை ஒன்று துவங்கியுள்ளது. இதன் இரண்டாம் கட்ட சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் துவங்கும் என அவரது மருத்துவர் கூறினர்.
இவருக்கு முன் உலகின் மிகவும் குண்டான ஆண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த இதே மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த மானுவல் உரீப் (Manuel Uribe) என்பவர் சுமார் 597 கிலோ எடையுடன் இருக்கையில் 2007 ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.
அதேபோல், உலகின் மிகவும் குண்டான பெண்ணாக கருதப்படும் ஈமான் அப்துல் அதீ என்ற சுமார் 500 கிலோ எடையுடைய பெண் மும்பையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று சுமார் 323 கிலோ வரை இழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது சகோதரிக்கும் மருத்துவக் குழுவிற்கும் இடையில் பெரிய சர்ச்சை உண்டாகி அவரது சிகிச்சைஇந்த வாரம் ஆரம்ப முதல் அபுதாபியில் தொடர்கிறது.
Source: Emirates 247