கொழும்பு - காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் படையெடுத்துள்ளனர்.
மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்தவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடலிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியால் கண்டியிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.