Top News

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மலையக விஜயம்





(க.கிஷாந்தன்)

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மலையகத்தின அட்டன் பிரதேசத்திற்கு 12.05.2017 அன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்திய அரசாங்கத்தின் 1200 மில்லியன் ரூபா செலவில் அட்டன் கிளங்கனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 கட்டில் வசதிகளை கொண்ட நவீன வசதியூடான வைத்தியசாலையை இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நோர்வூட் மைதானத்தில் இந்திய வம்சாவளி மக்களான மலையக தோட்ட தொழிலாளர்களை சந்திக்கும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ராஜித சேனரத்ன, டி.எம்.சுவாமிநாதன்க்ஷமன் கிரியெல்ல, நவீன் திஸாநாயக்க, மனோ கணேஷன் பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், அர்ஜீன ரணதுங்க,  பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு நிகழ்வாக மலையக அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு ஒன்று பொது கூட்டம் இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த விருந்தினர் கூடாரத்தில் வெவ்வேறாக இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினரடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
Previous Post Next Post