Headlines
Loading...
ஆப்கானுக்கு மேலதிக படையினரை அனுப்பும் கோரிக்கைக்கு டிரம்ப் மறுப்பு

ஆப்கானுக்கு மேலதிக படையினரை அனுப்பும் கோரிக்கைக்கு டிரம்ப் மறுப்பு



ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு 3 ஆயிரம் மேலதிக படையினரை அனுப்புவதற்கு அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் இராஜங்க திணைக்களமும் இணைந்து முன்வைத்த பரிந்துரை ஜனாதிபதி டிரம்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலிபான்களை இலக்குவைத்து விமானத் தாக்குதலை நடத்துவதற்கான அதிகாரம் இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை என அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
இந்த நிலையில் 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரையான படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து நேட்டோ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 13 ஆயிரம் நேட்டோ படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், அவர்களில் 8 ஆயிரத்து 400 பேர் அமெரிக்க படையினர் எனவும் கூறப்பட்டுள்ளது