சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் இணைந்து எடுத்துள்ள முடிவின்படி, இனி சவுதிக்கு வெளிநாட்டு பல் மருத்துவர்களை எடுப்பதில்லை என்றும் அவ்விடங்களில் சவுதி பல் மருத்துவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சவுதியில் மொத்தம் 26 பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்குகின்றன, இவற்றில் 8 தனியாருக்கு சொந்தமானவை. இவற்றிலிருந்து ஆண்டுக்கு சுமார் 3,000 பல் மருத்துவர்கள் வெளியாகின்றனர். 2015 ஆம் ஆண்டு மட்டும் 10,150 பல் மருத்துவர்கள் வேலைவாய்ப்பிற்காக பெயரை பதிவு செய்து வைத்துள்ளதில் சுமார் 5,946 பேர் சவுதி நாட்டின் பல் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette