ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகப் பிளவுபடுவதை தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார். இதனிடையே, கொலைக்காரர்களும், மோசடிக்காரர்களும் கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை தூய்மைப்படுத்துவதற்காகவே மக்கள் வாக்களித்தனர். இந்த நிலையில், கள்வர்கள், கொலைக்காரர்களை கட்சியில் இருந்து வெளியே சென்றால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இதன்மூலம் கட்சிக்கு நன்மையே கிடைக்கும் என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.