இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டதன் பின்னர், இதேபோன்றதோர் ஒப்பந்தத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் கைச்சாத்திடவுள்ளார். சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் போதே, பிரதமர் அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.
நகர அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், வீதி அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக சீனாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கிகரித்தது. ஆயினும், இந்த ஒப்பந்தத்தில் குறிப்பான செயற்றிட்டம் எதுபற்றியும் குறிப்பிடப்படவில்லை.
வெசாக் முடிந்ததும் சீனாவில், நடத்தப்பட்டவுள்ள “ஒரு பட்டி, ஒரு வழித்தடம்” எனும் உச்சி மாநாட்டில் பங்குபற்றவென பிரதமர், அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக, சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் உட்பட சீனத் தலைவர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி விஜயத்தின் போது, பங்குடமை அடிப்படையில், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விருத்தி செய்தல் உட்பட பல செயற்றிட்டங்களைச் செயற்படுத்தும் வகையில், இந்தியாவுடன், இலங்கைப் பிரதமர் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.
இதேவேளை, கூட்டு முயற்சி என்ற வகையில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக, சீன நிறுவனம் ஒன்றுடன் கையொப்பமிடப்படவுள்ள ஒப்பந்தத்தின் திருத்திய வடிவம் பற்றி அமைச்சரவை கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெலும் பண்டார