ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அப் பகுதி மக்களும் பள்ளிவாசல் சம்மேளனமும் அரசியல்வாதிகளும் மறந்துவிட்டதாகவும் தற்போது பிரதான சந்தேக நபருக்கு சார்பாக செயற்படுவதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் மாஹிர் மிகுந்த மன வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது;
ஏறாவூர் இரட்டைக்கொலை இன்றுடன் #8 மாதம்.
வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை
வாய்தா வாய்தா.
கைதிகளுக்கு தினம் தினம் விதவிதமா பிரியானி.
மறைக்க ஒரு கூட்டம் மண்ட தெறிக்க ஓடுது.
மருபக்கம் மறந்தே போனது ஏறூர் சமூகம்
கைதிக்கி கொடைவள்ளல். நல்லவரு வல்லவரு என்றெல்லாம் நற்சான்றிதழ் கொடுக்க பள்ளிவாயல் நிருவாகம்.
யாருக்கு என்னானா நமக்கென்ன நாம. நம்ம பதவி வீறு நடை போடும் சம்மேளனமும். உலமா சபையும்.
இதென்ன நம்ம ஊட்டு பிரச்சினையா இதெல்லாம் கணக்கே எடுக்கேலா ஊரின் பிரமுகர்கள்.
அன்பு நண்பர்களே பெறியோர்களே. நான் யார் மனதையும் புண்படுத்துவதல்ல இதன் நோக்கம். அன்று கொதித்தெழுந்தீர்கள் சந்தோசம் ஆனால் அது அன்றோடு அடங்கிவிட்டதே என்றென்னி கவலையடைகின்றேன்.
கொடுமைகளும். அநியாயங்களும் தன் வீட்டு கதவை தட்டினால்தான் ( அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்) பிரச்சினையா அந்த வலியை உணர்வீர்களா.
இன்று எனக்கு ஏற்பட்டது நாளை உங்களுக்கு வராது என்பதற்கு என்ன நிச்சயம்.
ஊரின் தலைமை அமைப்புகளே உலமா சபையாக இருக்கலாம் சம்மேளனமாக இருக்கட்டும் அன்றைய சங்கிலி போராட்டத்துடன் உங்க பணி முடிந்ததா. அதற்குப்பின்னரான காலப்பகுதியில் இது சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையாவது எடுத்தீர்களா. ஆகக்குறைந்தது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிடம் இந்த வழக்கு சம்பந்நமாக எதாவது கலந்துரையாடி உள்ளீர்களா. ஏன் இந்த போடுபோக்குத்தனம் மரணித்தது உங்களுக்கு உரவினராக இல்லாமல் இருக்கலாம்.
அன்று இந்த சமூகம் தன் உடன் பிறவா சகோதரிகளாகவே பார்த்தார்கள். கொதித்தார்கள் இந்த உணர்வை நீங்கள் புறிந்து கொள்ளவில்லையா. மரணித்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் இந்த ஊர் சமூகத்தின் எதிர்பார்ப்புக்காகவாவது இந்த கொலைகாரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பாடுபடுவது உங்கள் கடமையல்லவா.
கைதிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கின்றது ஊரின் முக்கிய பெரிய பள்ளிவாயல்களில் ஒரு சில இதுதான் உங்களின் நேர்மையா . உங்கள் சகோதரிக்கு இவ்வாறான பிரச்சினை என்றால் இவ்வாறான ஈனமான செயலை செய்திருப்பீர்களா. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
பொறுப்புக்கள் . பதவிகள் எல்லாம் உங்கள் பெயர்களை அழங்கரிப்பதற்காக வழங்கப்பட்டவையல்ல. அது ஒரு அமானிதம். சமூகத்தேவைக்காக வழங்கப்பட்டது.
கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
நாளை மறுமையிலே நிச்சயமாக றப்புக்கு முன்னால் மரணித்த அந்த இரு ஸஹீதுகளுக்கும் நீங்கள் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். இன்ஸாஅஅல்லாஹ். அனாதையாக வாழ்ந்த அந்த இரு ஜீவன்களின் மரணமும் அனாதையாகவே போயிற்று.
அல்லாஹ் போதுமானவன் . இவ் அநியாய கொலையை செய்தவனுகளுக்கும். இக்கொலையை மறைக்க இரவுபகலா பிரயத்தனம் செய்கின்றவர்களுக்கும். பொறுப்பை சரிவர செய்யாது வேடிக்கை பார்க்கின்ற பொறுப்புதாரிகளுக்கும் . அதிகாரிகளுக்கும் சரியான பாடம் புகுட்டுவான்.
இன்ஸாஅல்லாஹ்.