நாட்டில் காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென் மற்றும் மேல் மாகாண பௌத்த மக்களுக்கு முஸ்லிம்கள் உதவுதன் மூலம் நாட்டில் உருவாகியுள்ள சிங்க - முஸ்லிம் இனவாத கோசத்தை தணிக்க முடியும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பு நிகழ்வில் உரையாற்றி அவர்,
மழை மற்றும் மணசரிவினால் முஸ்லிம்களும் பௌத்தர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட பௌத்த மக்களுக்கு நாட்டின் நாலா புறங்களிலும் வாழும் முஸ்லிம்களாகிய நாம் உதவிக்கரம் நீட்டுவதன் மூலம் இந் நாட்டில் பகை மறந்து நல்லிணக்கம் கட்டியெழுப்ப முடியும்.
கடந்த அனர்த்த காலங்களிலும் முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு உதவினர், அதே போல இந்த அனர்த்த காத்திலும் உதவினால் பொதுபலசேனா போன்ற கொடிய அமைப்புக்களின் சதிவலையில் இருந்து மீள முடியும். என்றார்.