Top News

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய மாட்டேன் – கோத்தபாய ராஜபக்ஷ



பகிரங்க அரசியலில் ஈடுபட தான் தீர்மானிக்கவில்லை என்பதால், தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து கொள்ளும் அவசியம் தனக்கில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபாய ராஜபக்ச, தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய உள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்காக கோத்தபாயவுக்கு நெருக்கமான சில வர்த்தகர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதல்வியான இவங்கா ட்ரம்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவற்றில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கோத்தபாய,
எனது மகன், மனைவியின் தாய், சகோதரர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால், நான் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று வர வேண்டும். அதேபோல் பகிரங்க அரசியலுக்கு வர நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. இதனால், எனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து கொள்ளும் தேவையில்லை.
அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து கொள்ள நீண்டகாலம் எடுக்கும் என்பது பொய்யானது. குடியுரிமையை இரத்து செய்து கொள்ள வேண்டுமாயின் அமெரிக்க தூதரகத்தில் கோரிக்கை மனுவை சமர்பித்தால் இரண்டு வாரங்களில் அதனை இரத்து செய்து கொள்ள முடியும் என்றார்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் கூறி வந்துடன் கோத்தபாயவும் அப்படியான உள் அர்த்தங்களை கொண்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், கோத்தபாய தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக அரசியல் தரப்பில் தகவல்கள் கூறுகின்றன.
Previous Post Next Post