சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
தொடர்ந்து இதே போன்று புகார் எழுவதை கருத்தில் கொண்டு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
மனநல பரிசோதனைக்கு மறுத்த கர்ணன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் பொறுமை இழந்த உச்சநீதிமன்றம், மனநிலை பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தராதது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் குற்றவாளி என தீர்ப்பளித்து 6 மாதம் சிறைதண்டனை விதித்துள்ளது.
மட்டுமின்றி நீதிபதி கர்ணன் பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன் மேற்கு வங்க பொலிசார் உடனடியாக நீதிபதி கர்ணனை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தண்டனை தருவது இதுவே முதன் முறையாகும்.