ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப இலக்கம் 8500 க்கு உட்பட்ட விண்ணப்பதாரிகளில் இதுவரை தமது பயணத்தை உறுதி செய்து கொள்ளாதவர்கள் உடனடியாக பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அரச ஹஜ் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடம் இலங்கைக்கு 2840 ஹஜ் கோட்டா சவூதி ஹஜ் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 2400 பேரே தமது பயணத்தை உறுதி செய்துள்ளமையினாலே ஹஜ் குழுவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் கருத்துத் தெரிவிக்கையில் ஒரு சில ஹஜ் முகவர்கள் தங்களது உறவினர்களது பெயர்களில் போலியான பதிவுகளை மேற்கொண்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இறுதி நேரத்தில் இந்தப்பதிவு எண்களில் கூடுதல் கட்டணத்தில் இதுவரை திணைக்களத்துக்கு விண்ணப்பிக்காதவர்களை அழைத்துச் செல்வதே இவர்களது இரகசியத் திட்டமாகும். இதனாலேயே ஹஜ் கடமையை உறுதி செய்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தற்போது விண்ணப்ப இலக்கம் 8500 வரையிலான விண்ணப்பதாரிகளுடன் தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள குறிப்பிட்ட விண்ணப்பதாரிகள் உடனடியாக தமது பயணத்தை உறுதி செய்யுமாறு வேண்டப்படுகின்றார்கள் என்றார்.

ARA.Fareel