Headlines
Loading...
தேசிய நல்லிணக்கக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய நல்லிணக்கக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்



வரலாற்றில் முதன்முறையாக 2017 மே மாதம் 02 ஆம் திகதி அன்று  அமைச்சரவையானது இலங்கையி;ன் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கைக்கு அங்கீகாரம் அளித்தது.

தேசிய நல்லிணக்கக் கொள்கையினை உருவாக்கும் செயன்முறையானது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் சனாதிபதியுமான அதிமேதகு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களின் தலைமையின் கீழ் அவ்வலுவகத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்க அலுவலர்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபை அங்கத்தவர்கள், சிவில் சமூகம், கல்வியாளர்கள், வல்லுநர்கள்,, அடிமட்ட செயற்பாட்டாளர்கள் போன்ற பல்வேறு பங்குதாhரர்களுடன் சுமார் ஒரு வருட காலமாக நடத்தப்பட்ட விரிவான ஆலோசனை செயற்பாடுகளின் பின்னர், அமைச்சரவை கலந்துரையாடல்களுக்கென சனாதிபதி  அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் 2016 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது .'நல்லிணக்கமானது பலதரப்பட்ட  பங்குபற்றுனர் மற்றும் அரசாங்கத்தின்; முயற்சி என்பவற்றின் சேர்க்கை" என்பதை பிரதிபலிக்கும் பொருட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் இக்கொள்கையானது உருவாக்கப்பட்டுள்ளது. என அமைச்சரவைக்கான தனது கடிதத்தில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.    

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சர் கௌரவ மனோ கணேசன் சில திருத்தங்களை முன்வைத்தார். எனவே அமைச்சரவையானது இந்த திருத்தங்களை தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்துடன் கலந்துரையாடி தெளிவுபடுத்துமாறு சனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்தது.
பல்வேறு அமைச்சுகள், அவ்வமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் தேசிய கொள்கையினை வடிவமைத்தல்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் சகவாழ்வு மற்றும் மொழிக்கொள்கை போன்ற இரு விடயங்கள் தொடர்பான திருத்தங்களை முன்மொழிந்தார். அதைத் தவிர்ந்த ஏனைய கொள்கைப்  பத்திரம் முழுவதும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சு மற்றும் நல்லிணக்கம் சார்ந்த ஏனைய அமைச்சுக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அமைச்சரவை அமைச்சர்களுக்கான ஆரம்ப சமர்ப்பிப்பினைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமானது பல்வேறுபட்ட பங்குதாரர்களுடன் மேலதிகக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளின் பின்னர் மீள் பரிசீலனை செய்யப்பட்ட கொள்கையானது மீண்டும் அமுலாக்கப்படுவதற்காக அதிமேதகு சனாதிபதி ழைத்திரிபால சிறிசேன மற்றும் தேசிய சகவாழ்வு ,கலந்துரையாடல், அரச கரும மொழி அமைச்சர் கௌரவ மனோ கணேசன் ஆகியோரால் இணைந்த அமைச்சரவை விஞ்ஞாபனம் ஒன்றாக  2017 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

' அரசின் தேசிய ரீதியில் நல்லிணக்க கொள்கையாகத் திகழ்வதுடன் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்திற்கான வழிகாட்டியாகவும் தேசிய நல்லிணக்க கொள்கையானது அமையவுள்ளது. அத்துடன் இக்கொள்கை நல்லிணக்கத்திற்கென செயற்படுவோர்க்கான வழிகாட்டல் கட்டமைப்பு ஒன்றாக அமைவதுடன் பல்வேறுபட்டோரின் அனைத்து நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஒத்திசைவை அடைய உதவும்.

நீண்ட காலமாக இருந்து வரும் திரட்டப்பட்ட நல்லிணக்கத்திற்கான கொள்கையின் வெற்றிடத்தினை இத்தேசிய நல்லிணக்க கொள்கை நிறைவு செய்யும். அத்துடன் இக்கொள்கையானது இலங்கையின் பரந்துபட்ட முன்னோக்கிய நல்லிணக்கத்திற்கான நோக்கத்தினை திருப்திப்படுத்துவதுடன், தேசிய நல்லிணக்க செயன்முறையினை வழிகாட்டுவதற்கான ஒர்; பரந்துபட்ட ஒத்திசைவான கட்டமைப்பு ஒன்றாகவும் அமையும். இவ்வகையில் பல்வேறுபட்ட நல்லிணக்க முயற்சிகளும் செயற்பாடுகளும் நடைபெற்றுவரினும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட ஒரு தேசிய நல்லிணக்க கொள்கை ஒன்று இதுவரையில் இல்லாத குறையினை இந்த தேசிய நல்லிணக்க கொள்கையானது நிறைவு செய்யும்.

இத்தேசிய நல்லிணக்க கொள்கையானது பல கொள்கைக் கோட்பாடுகளை முன்வைக்கின்றது. அதாவது விதிகள் மற்றும் வழிகாட்டல்களை வகுக்கவும் தேசிய நல்லிணக்கம் சார்ந்த திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கான செயற்படுத்தக்கூடிய  கொள்கைகள் மற்றும் நீண்ட கால இலக்குகளின் தொகுப்பாகவும் இது அமைகிறது. அவையாவன  சமத்துவம்,மனித உரிமை, நீதி, சட்டஆட்சி, நிலைமாறும் நீதி, உள்ளடக்கம் மற்றும் பல்வகைத்தன்மை, நிலைத்து நீடித்த அபிவிருத்தி, குடிமை உணர்வு போன்றவையாகும்.

இக்கொள்கை தேசிய நல்லிணக்க செயன்முறையின் பல்வேறு பங்குதாரர்களுக்கு வழிகாட்டலை வழங்குவதுடன் அவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களில் முரண்பாடு உணர்திறன், பல் கலாசார விழிப்புணர்வு, பாதிக்கப்ட்டோர் சார்புத்தன்மை, பாலினப் பதிலளிப்பு, உணர்திறன், முன்னோக்கிய பார்வை மற்றும் புத்தாக்கம், தலைமைத்துவம், நிலைத்து நீடித்தல், செயற்றிறன், ஒருங்கிணைப்புத் திறன், நிரப்புத் தன்மை, தெளிவானதும் சீரானதுமான தொடர்பாடல் போன்றனவாகும்.

தேசிய நல்லிணக்கக் கொள்கையானது செயற்படுத்தல் மூலோபாயத்தினையும் கொண்டுள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நடைபெற்றுக் கொண்டுள்ள தேசிய முயற்சிகளில் தேசிய கொள்கையில் கூறப்பட்ட விழுமியங்களை முன்னிறுத்துவதுடன் வருடாந்த செயற்திட்டங்களினூடாக நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் மற்றும் செயற்திட்டத்தினை வகுத்தல், தேசிய விழிப்புணர்வு மற்றும் கல்விசார் பிரசாரத்தை தேசிய நல்லிணக்க கொள்கையை மக்களிடம் சேர்ப்பதற்காக வகுத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்;சித் திட்டம் மற்றும் செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்றவையாகும்.

அவ்வாறே    தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் இறுதியான தேசிய நல்லிணக்கக் கொள்கையினைத் தயார் செய்ததுடன் இவ்விறுதிப் பதிப்பே 2017 மே மாதம் 02 ஆம் திகதி  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.