ஜே வி பி, ஞானசார இனவாதத்தின் முன்னால் அமைதி காக்கிறது என்பது முட்டாள்தனமாகும்

NEWS
2 minute read


முஸ்லிம்களுடைய காவலர்கள் நாங்கள்தான் என்று கூவித்திறிந்தவர்களை தங்களுடைய பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பி வைத்துவிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை வரும்போது ஜே.வி.பி யினரை உதவிக்கு அழைக்கும் முஸ்லிம் சமூகம் எந்தளவு நல்லாட்சியில் கைசேதப்பட்டுள்ளது என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.

தங்களுடைய  தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கு முதுகு தண்டை வலைந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கேள்வி கேட்க திராணியில்லாத முஸ்லிம் சமூகம் எங்கேயோ இவர்கள்தான் ஜே.வி.பி யினருக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியவர்கள் போல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கேட்பது வெட்கம் கெட்ட செயலாகும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் எம்.பிக்களை விட ஜே.வி.பி யினரே இனவாதிகளின் முஸ்லிம் விரோத போக்குக்காக வலுவான குரல் எழுப்பி வந்தனர். என்பதனை நாம் மறக்கக் கூடாது. அந்த சந்தர்ப்பங்களில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அவர்கள் எதையுமே பேசுகின்றார்கள் இல்லையென்ற குற்றம் சுமத்தியும் வந்துள்ளார்கள்.

இறக்குமதி வரி என்பது ஈச்சம் பழத்தை தொட்டு அதனோடு சேர்த்து அரசாங்கம்  ஏனைய அத்தியாவசிய பொருற்களுக்கும் அவ்வாறான வரி அறிவிப்பு செய்துவிடக் கூடாது என்ற நன்நோக்கோடு அவர்கள் பேசியதையும், முஸ்லிம்களின் நோன்பு மாதம் நெருங்கும் போது ஈச்சம் பழ விவகாரத்தில் அரசு இப்படி செய்வது நியாயம் இல்லை என்றும் குரல் கொடுத்தார்கள் அதற்காக எல்லா விடயங்களுக்கும் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பது தவறாகும்.

மட்டுமல்ல அவர்கள் அந்த விடயத்தை பாராளுமன்றத்தில் உரத்து பேசாது விட்டிருந்தால் எம்மில் பலருக்கு ஈச்சம்பழ விவகாரம் இன்றுவரை தெரியாமல் போயிருக்கும்.

கத்னா வைத்தவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும், ஆட்சியின் பங்காளிகளாவும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜே.வி.பியினருக்கு இனவாத நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப என்ன தேவை இருக்கிறது, என்பதை முஸ்லிம் சமூகம் நாம் சிந்திக்க வேண்டும். ஜே.வி.பி எதிர்கட்சியில்  இருக்கிறது, ஆனால் முஸ்லிம்களின் காவலர்கள் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இனவாத நாகங்களுக்கு மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதை முஸ்லிம் சமூகம் மறந்துவிட்டதா?.

யாரின் தலைமைலாவது பழியைப்போட்டு தங்களுடைய தலைவர்களை தலையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள சில மூடர்களுக்கு, நாம் எதைச் சொன்னாலும் தவறாகத்தான் தெரிகிறது.

ஜே.வி.பி யினர் இனவாதத்திற்கு எதிராக பேச வேண்டும் என்று கேற்பவர்கள் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் ஏன் பேசாமல் இருக்கிறார்கள்என்று கேள்வி கேட்க புத்தியில்லாமல் இருக்கிறார்கள். ஏன் என்பதுதான் எமக்கு புரியவில்லை. இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது என்பது மறந்து விட்டதா? இல்லை அந்தக்கட்சிக்கு அள்ளுண்டு முஸ்லிம் சமூகம் வாக்களித்ததே அதை மறந்துவிட்டதா? ஏன் ஐ.தே.கட்சிக்காரர்கள் எவரும் இதுவரை இனவாதத்திற்கு எதிராக பேசவில்லை என்ற குற்றச்சாட்டை, முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிலர் சொல்ல முன்வருகிறார்கள் இல்லை.

பள்ளிவாயல்களை தாக்குதல் நடத்தியவர்கள்,அளுத்கமை, தர்கா நகரில் கலவரம் ஏற்படுத்தி எரித்தார்கள் என மஹிந்த அரசை இனவாதிகளுடன் இட்டுக்கட்டியவர்கள், இப்போது மாலை ஆறு மணியானவுடன் "மாலைக்கண் நோயுடனா இருக்கிறார்கள்" தினமொரு  முஸ்லிம் வர்த்த நிலையம் தீக்கு இறையாகிறதே எங்கே சென்றார்கள் உங்கள் முன் நல்லாட்சியை தோளில் சுமந்து வந்து வாக்கு கேட்டவர்கள்..,!?

முஸ்லிம் சமூகத்திற்கு கேடையமாக இருக்கவேண்டியவர்கள் இனவாதிகளின் அம்புகளுக்கு வில்லாய் இருப்பதுதான் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் முதல் பிரச்சினை!

அஹமட் புர்க்கான் 

6/grid1/Political
To Top