புதிய அமைச்சரவை பேச்சாளராக தயாசிறி

NEWS
0 minute read


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நியமிக்க கட்சியின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தயாசிறி ஜயசேகரவின் பெயர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக ஆகியோர் கடமையாற்றி வருகின்ற நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்படவுள்ளார்.
முன்னதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தபோதும், அவர் அந்த பதவியை நிராகரித்துள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
To Top