Top News

ஓமானில் கடையொன்றில் தீ விபத்து


ஒமானிலுள்ள ஆளுனர் பிரதேச சந்தைத் தொகுதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயினால் கடையின் இரு மாடிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் உயிர்ச் சேதகங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் தீயணைப்புப் பிரிவு என்பன இணைந்து தீ ஏனைய இடங்களுக்குப் பரவுவதை மட்டுப்படுத்தியுள்ளனர். தீக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
Previous Post Next Post