(க.கிஷாந்தன்)
நடந்து முடிந்த க.பொ.த.சாதாரண தரம்,க.பொ.த.உயர்தரம், தரம் ஐந்து புலமை பரிசில் ஆகிய வற்றில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்று அட்டன் கல்வி வலயத்திலுள்ள 152 பாடசாலைகளிலிருந்து முதல் பத்து இடங்களை பெற்றுக்கொண்ட பாடசாலை அதிபர்களுக்கு 02.06.2017 அன்று பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அட்டன் கல்வி வலயத்தின் கல்வி பெறுபேறுகளின் ஆய்வு நூல் வெளியீடும் பெறுபேறுகள் பெற்ற அதிபர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கும் நிகழ்வு 02.06.2017 அன்று காலை அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் அட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது 2015,2016 வருடடங்களில் மூன்று பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களை பாரதி தமிழ் வித்தயாலயம், ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, புனித கப்ரியல் பெண்கள் கல்லூரி பெற்று கொண்டதுடன் ஏனைய இடங்களை அட்டன் கல்வி வலயத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் பெற்றுக்கொண்டன.
இந்த நிகழ்வில் அட்டன் கல்வி வலயத்தில் முதல் இடத்தினை பெற்ற பாரதி வித்தியாலயத்திற்கும் கல்வி பெறுபேறுகளின் ஆய்வு நூலின் முதல் பிரதியினை அப்பாடசாலையின் அதிபருக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு அட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், தமிழ் மற்றம் சிங்கள பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்;.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்விப்பிணப்பாளர் எதிர்வரும் வருடம் அனைத்து மாணவர்களும் க.பொ.த .சாதாரண தர பரீட்சையில் அனைத்து மாணவர்களும் மூன்று பாடங்களில் திறமை சித்தியும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சகல மாணவர்களும் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment