மாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள மெசேஜ் எம்மை அதிகம் சிந்திக்க வைத்துள்ளது.
அண்மைக்காலமாக அதிகம் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டது, அதிலும் மஹியங்கனையில் காத்தான்குடி வர்த்தகரின் கடை எரிந்து சாம்பல் ஆகியதில் அவரின் அனைத்து உழைப்புக்களும் சாம்பலாகின, இதனால் அவருடைய 6 பெண்பிள்ளைகளின் வாழ்வு கேள்விக்குறியாகியது, இந்த சம்பவத்தை நான் எனது தந்தையின் பேஸ்புக் மூலம் சிலோன் முஸ்லிமின் செய்தியால் அறிந்து கொண்டேன்,
இந்த சம்பவம் என்னை கண்ணீர் சிந்த வைத்தது, இப்படியும் நமது சமுதாயத்தின் வர்த்தகம் தீக்கிரையாக்கப்பட்டால் நமது எதிர்காலம் மீது கேள்விக்குறி உருவாகும், இதுவே எனது தந்தையுடையது என்றால்? நீங்களும் சற்று சிந்தியுங்கள்,
அடுத்த நாள் பாடசாலை சென்ற சிறுவன் தனது நண்பர்களிடம் ரூபா 10 ஐ அறிவிட்டுள்ளார், நண்பர்களும் காரணம் கேட்டு கவலையடைந்தனர், பாடசாலை முழுதும் இந்த செய்தி பரவியது, இதுவரை 2800 ரூபா சேமித்துள்ள இந்த சிறுவனின் முயற்சி பாராட்டத்தக்கது, இந்த சிறுவன் உங்களிடம் கேட்பது எல்லாம் ரூபா 10 ஐதான் முடிந்தால் உதவி செய்து தீக்கிரையான கடை உரிமையாளருக்கு ரமழானில் உதவிடுங்கள்.
இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்கள் 10 ரூபா கொடுத்தால் கிட்டத்தட்ட ஒருகோடி வரும், அவருடைய இழப்பு 60 இலட்சம் இதுவே அந்த சிறுவனின் இலட்சியம்.
Really it's good idea to give hand to harm people.If it happens organizational structure will be successful( ACJU - Mosque- public).... Now our muslim society need like these ideas from overcome it...
ReplyDeleteplease enter any account number or how to pay method to share this message
ReplyDeleteGOOD JOB
ReplyDeletePost a Comment