மீண்டும் ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

NEWS
0


ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்த நிலையில், ஹெரட் நகரில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் அருகே உள்ள ஒரு பூங்காவில் நேற்று மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடந்த ஒரு வெடிகுண்டு தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர். இந்நிலையில் ஹெரடில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top