Top News

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு



ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் அரசு உயர் அதிகாரிகள் குடியிருக்கும் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 90 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகின. 300க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் சிலர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததையடுத்து, இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத வெறியாட்டத்தை தொழிலாக கொண்டுள்ள தலிபான்களுடன் சமரச பேச்சுவாத்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக அமைய வேண்டும், நாட்டில் இருந்து தீவிரவாத அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவேண்டும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உறுதிபூண்டுள்ளார்.

இந்நிலையில், காபூல் தாக்குதலில் 150 உயிர்கள் பலியானதற்கு அதிபர் அஷ்ரப் கானி வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டைச் சேர்ந்த 150 அப்பாவி மகன்களும் மகள்களும் பலியானதை எண்ணி மிகுந்த வேதனை அடைகிறேன். உடல் கருகியும் கைகால்கள் சிதைந்த நிலையிலும் மருத்துவமனையில் சுமார் 300 பேர் சிகிச்சை பெற்று வருவதும் எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post