Top News

வடக்கு செயலணியின் 2017ம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களில் 38வேலைத்திட்டங்கள்



பாறுக் ஷிஹான்

மீள்குடியேற்ற அமைச்சின் மீள்குடியேற்றத்திற்கான வடக்கு செயலணியின்  2017ம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களில்   யாழ்ப்பாணம்  வேலணை சாவகச்சேரி பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக 38வேலைத்திட்டங்கள் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ள   நான்குகோடி ரூபாவிற்கு (40 மில்லியன்) அங்கிகாரம் கிடைத்துள்ளதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்  யாழ் மாவட்ட மீள்குடியேற்ற இணைப்பாளரும் மக்கள் பணிமனையின் தலைவருமான மௌலவி பி.ஏ. எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய   யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 17உள் வீதிகளுக்கு கொங்கிறீட் வீதிகள் அமைத்தல்  சனசமூக நிலைய புனருத்தானமும் தளபாடங்கள் விநியோகம் செய்தல் அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாசலில் பொம்மைவெளி மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகத்திட்டம்   1ம் குறுக்கு அராலிவீதி புதிய சோனகதெரு முழுமையா சுற்றுமதில்களுடன் பொது பாவனைக்கான கிணறு அமைத்தல்  இறால் வாடி வீதி புனரமைப்பு அபூபக்கர் பள்ளிவாசல் முன்வீதி புனரமைப்பு  ஒஸ்மானியாக் கல்லூரிக்கான வேலைத்திட்டத்தில்  மாணவர்களுக்கான மலசலகூடம் கல்லூரி ஜின்னா மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபம்  கல்லூரிக்கான தண்ணீர் விநியோகத்திட்டம் கீழ்ப்பகுதி மேடை புனரமைப்பு கல்லூரிக்கான பெயர் வளையம் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அறை மஹ்மூத் மண்டபத்திற்கான வி.ஐ.பி  கதிரைகள் கதீஜா கல்லூரிக்கான வேலைத்திட்டத்தின் கீழ் வகுப்பறை கூரை  வேலை காதி அபூபக்கர் வீதியிலுள்ள கதிஜா கல்லூரிக்கான சுற்றுமதில் கேற் வேலை நடைபெற உள்ளன.

அடுத்து வேலணை பிரதேச செயலகம் பிவில் மண்கும்பான் பள்ளிவாசல் உள்வீதி உள் வீதிகளுக்கான மின்சார விளக்குகள் நெய்னாதீவு இஸ்லாமிய சனசமூக நிலைய வீதி அமைத்தல் நெய்னாதீவு சனசமூக நிலையத்திற்கான பொதுக்கிணறு அமைத்தல்  நெய்னாதீவு பள்ளிவாசலுக்கு முன்னுள்ள அணைக்கட்டு புனரமைத்தல் சாவகச்சேரி பிரதேச செயலகம் தற்காலிக இருப்பிட வசதி பெறுவோருக்கான பொதுமலசல கூடம் கிணறு திருத்தமும் தண்ணீர் விநியோகமும் மின்சார கம்பமும் மின் விளக்குகள் அமைத்தலும்  தற்போது இத் திட்டங்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் வேலைத்திட்டங்கள் அப்பிரதேச செயலகங்கள் ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் வேலைத்திட்டங்கள் அவ்வப்பகுதியில் முன்னெடுக்கப்படும்  என  குறிப்பிட்டதுடன் இவ் அபிவிருத்தித் திட்டங்கள் வேறு எந்த ஒரு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படவில்லை என்றும் இத்திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக நடந்து முடிந்திட அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புக்களையும் தரும்படி கேட்டுள்ளார்.

இதே வேளை வடக்குமாகாணசபை உறுப்பினர்   அய்யூப் அஸ்மினின்  நிதி ஒதுக்கீட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்படவுள்ளது என கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. 2017ஆம் ஆண்டுக்கான உறுப்பினரின்  பிரமான அடிப்படையிலான விசேடமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் பெரியளவிலான பார்வையாளர் அரங்கம் ஒன்றை அமைப்பதற்காக இவ் வருட ஆரம்பத்தில் வடக்கு மாகாண  உறுப்பினரால் அனுப்பிவைக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சர்சபை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அத்துடன் மேற்படித்திட்டத்தினை உள்ளுராட்சி  சபையான யாழ் மாநகரசபை அமுல்படுத்தவுள்ளது  எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை  சுட்டிக்காட்டத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post