Top News

பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்வு



அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 78 பேர் தொடர்ந்தும் காணாமல் போனவர்களாக உள்ளாதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 72 பேர் காயமடைந்துள்ளனர்.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்சமயம் 6 லட்சத்தை கடந்துள்ளது.
அதன்படி, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 376 குடும்பங்களை சேர்ந்த 6 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக உயிரிழப்புகள் இரத்தினபுரி மாவட்;டத்தில் பதிவாகியுள்ள நிலையில் அது 86ஆக காணப்படுகின்றது.
அதுபோல் களுத்துறை மாவட்டத்தின் பலியானவர்களின் எண்ணிக்கை 65ஆகவும் மாத்தறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 44ஆகவும் காணப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது வரையில் 2 ஆயிரத்து 93 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
11 ஆயிரத்து 56 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அதுபோல் 225 தற்காலிக முகாம்களில் 25 ஆயிரத்து 245 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் நாளைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் 39 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளைய திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகவுள்ளடன்,  பலாவெல, பாரவத்த மற்றும் கலவானை முதலான தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட 14 பாடசாலைகள் நாளை மறுதினம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post