Top News

அடுத்த நோன்புக்கு 90 வீத முஸ்லிம்கள் பிச்சையெடுப்பர்


குளிப்பாட்டுங்கள், கவனிடுங்கள், அடக்கம்செய்யுங்கள், நாளைக்கு மற்றதை பார்க்கலாம் என்று புதிது புதிதாக முஸ்லிம் கடைகளை தீ வைத்து பின் நல்லடக்கம் செய்துகொண்டிருக்கிறது இனவாதம்.

"யஹபாலனய" என்ற பெயரில் எம்மை வழிமறித்து ஏமாற்றி ஆட்சியை பிடித்து வடிகட்ட முடிவெடுத்துவிட்டார்கள்.

இனவாதத்தையும் ஊழலையும் விரட்டியடிக்கவே கடந்த மஹிந்த அரசை வீழ்த்தியதாக மேடைமுழுதும் வீர வசனம் பேசிவருகிறோம். ஆனால் அது உண்மையாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.

‘யஹபாலனய’ என்ற நல்லாட்சி கம்பனியின் பாட்டனர்களாகிய முன்னால் ஜனாதிபதி, இந்நாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான ராஜித சேனாரதன, பாடாலி சம்பிக்க போன்றோர் இந்த இனவாத மறுபிரவேசம் குறித்து கவனம்செலுத்தாது வேறு சில விடயங்கள் பக்கம் மக்களை திசைதிருப்புவது ஏதோ புதிய அர்த்தத்தை தருகிறது. 

தினம் ஒரு கடை என்ற விகிதத்தில் முஸ்லிம்களின் கடைகளை பட்டியலிட்டு நல்ல நாள் பார்த்து தீ வைத்தல் என்பது மிக சுருங்கிய நாட்களுக்குள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தி அடுத்த ரமழானுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலையை உண்டுபன்னுவதற்கே என்பது தான் அர்த்தமோ…?

முழுக்க முழுக்க முஸ்லிம் அரசியல்வாதிகளை மட்டும் குரைகூறி விமரசிக்கின்ற தொழிலையே முழுநேர தொழியாகச் செய்துவருகிறோம்.
ஆளும் அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிக‌ளுக்கு அரசை விமர்சிக்க ஒரு எல்லை இருக்கிறது அதுதாண்டினால் அவர்களின் கதிரை பரிபோகும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் நமது அரசியல் வாதிகளை முழுமையாக நம்பக்கூடாது.

சமூகத்தில் இயங்குகின்ற பல ஜமாஅத்துக்கள் இனவாதிகளின் எல்லை மீறிய செயற்பாடுகள் பற்றி வாய்மூடி இருக்கிறார்கள், இருப்பார்கள். அதனால் நமது ஜமாஅத்துக்களை முழுமையாக நம்பக்கூடாது.
பாராளுமன்றத்தில் முன்வரிசையில் அமர்ந்து எல்லா வாதத்திற்கும் கருத்துச் சொல்லி, பதிலளித்துவந்த‌ பிரதமரை அண்மைக்காலமாக காணமுடியவில்லையே................எங்கே? இவரை நம்பி எப்படி நமது உரிமை, பாதுகாப்பு, சுத்ந்திரம் பற்றி பேசமுடியும்.....?

நாம் ஒவ்வொருவரும் தனித்துநின்று எவ்வாறு இவனாதத்திற்கு எதிரான செயற்பட முடியும் என்பதை பற்றியே சிந்திக்கவேண்டும்.
முஸ்லிம்கள் எந்த காலத்திலும் ஒன்றுபடமாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்து செயற்படவேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் ஓர் ஆளுமையின் கீழ் ஒன்றுபடுவோன் என்றால்,
அமைச்சர் ரவூப் ஹகீமின் ஆதரவாளர்கள் அவரின் தலைமைத்துவத்தையே வேண்டிநிற்பர்,

அமைச்சர் ரிக்ஷாத் பதியூதினின் ஆதரவாளர்கள் அவரின் தலைமத்துவத்தையே வேண்டிநிற்பர்,
ஜமாஅத் ஆதரவாளர்கள் அதன் அமீரையே தலைவராக ஏற்கும்படி ஒற்றைக்காலில் நிற்பர்.

அப்படி என்றால் எப்படி ஒரே தலைமைத்துவம் சாத்தியமாகும்..?
முஸ்லிம்களின் இந்த வீக்னஸை எதிரிகள் சரியான புரிந்துவைத்துதான் எம்மை சூரையாடி கூறுபோட முடிவெடுத்துள்ளனர் என்பதையை காலதாமதமாகவேயாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.

தினம் ஒரு கடை, வாரம் ஒரு பள்ளி என்று தீ வைத்தால் அடுத்த றமழானில் 90வீதமான முஸ்லிம்கள் பிச்சை எடுக்கவேண்டிவரும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அல்லாஹ் போதுமானவன்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்












Post a Comment

Previous Post Next Post