Top News

யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கிய வாள் வெட்டுக்குழு தலைவர்கள் இந்தியாவில் கைது



பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத வாள் வெட்டு குழுக்களை இயக்கி வருபவர்கள் என தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேவா, பிரகாஸ் உட்பட மூன்று முக்கிய நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(30)  இரவு இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பி சென்ற நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் குழு மோதல்களுக்கு காரணமாக இருந்தும் பல குழுக்களை இயக்கி வருவதாகவும் தெரிவித்து பிரசன்னா, தேவா, பிரகாஸ் ஆகிய மூன்று முக்கிய நபர்கள் பொலிஸாரால் பல காலமாக தேடப்பட்டு வந்தனர். 

இந்த மூன்று நபர்களும் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்கள் பல மாணவர்கள் இளைஞர்களை தம்முடன் இணைத்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து பொலிஸாரால் பல காலமாக தேடப்பட்டு வந்தனர். அவர்களின் புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வழங்கி பொதுமக்களிடம் இருந்து அவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் கோரியிருந்தனர். 

பல காலமாக இவர்கள் தலைமறைவாகி இருந்த நிலையிலும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டதுடன் அது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த மூவர் எங்கு தலைமறைவாகி உள்ளார்கள் என எந்த வித தகவல்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. 

இருப்பினும் இந்த குழுக்களின் தலைவர் என தெரிவிக்கப்படும் பிரசன்னா என்பவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார் எனவும் ஏனையவர்கள் இலங்கையில் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாகி உள்ளார்கள் என அண்மையில் பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையிலே நேற்று முன்தினம் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியா சென்ற வேளை தேவா, பிரகாஸ் மற்றும் கரிஸ் டானியல் ஆகியோர் இந்தியவின் கியூ கிளை (Q branch) உளவுத்துறையால் உபொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் தாம் இலங்கையில் "இன்பம் துன்பம்" என்ற குழுவில் அங்கத்தவர்ரகளாக இருப்பதாகவும் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post